Print this page

கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை இந்த மாதமும் திருத்தப்படாது என எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் உலக எரிவாயு சந்தையின் விலையில் மாற்றம் ஏற்படாத காரணத்தினால், மார்ச் மாதத்தில் அது மாற்றியமைக்கப்படவில்லை எனவும், அதன் காரணமாக 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் 4,250 ரூபாவில் தற்போதும் கிடைக்கப்பெறுவதாகவும் நிறுவனம் மேலும் குறிப்பிடுகிறது. 3 கிலோ சிலிண்டர் 1,707 ரூபாயும், 2 கிலோ சிலிண்டர் 795 ரூபாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.