Print this page

இலங்கையை சேர்ந்த 6 பேர் கனடாவில் வெட்டிக் கொலை

ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலைசெய்யப்பட்ட இலங்கை குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரின் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்த அக்குடும்பத்தினரின் பெயர் விபரம்

ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பண்டாரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகனாயக (35) - தாய், இனுக விக்ரமசிங்க (7) - மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) -மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

Last modified on Saturday, 09 March 2024 13:40