Print this page

கோட்டாவிற்கு அடிப்படை நிர்வாக அறிவே இல்லை

சிறு பிள்ளைக்குக் கூட இருக்கும் நிர்வாகத் திறமையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொண்டிருக்கவில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் எதிரொலி எனும் நூல் வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகிந்த ராஜபக்ச மக்களிடம் இருந்து அவ்வாறானதொரு பதிலைப் பெறவில்லை எனவும், அவருக்கு இன்னமும் மக்களின் மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க தான் உட்பட மகா சங்கத்தினர் பெரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்ததாக ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கோட்டாபயவின் நிர்வாகத் திறமையின்மையால் ராஜபக்சக்களின் மரியாதை அழிக்கப்பட்டதாக கூறினார்.