Print this page

ஆதிசிவன் முன்னிலையில் கைதான எண்மர் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜையின் போது கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(19) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட 08 பேரும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான N.சிறிகாந்தா, அன்டன் புனிதநாயகம் மற்றும் அருள், க.சுகாஸ் உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.