Print this page

தேரரின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்றைய தினம் தேரரின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் என, அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரரை பார்வையிடுவதற்காக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, கண்டிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார்.