Print this page

முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா

அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் அந்தஸ்தற்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும், தங்களது பதவியை, இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Monday, 09 September 2019 02:25