Print this page

மின்னல் தாக்கியதில் மூவர் பலி

நேற்று நிலவிய சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கி ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இரத்தோட்டையில் மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுமியும் 23 வயதுடைய சகோதரனும் உயிரிழந்துள்ளனர்.

வெல்கலயாய பகுதியில் உள்ள தங்களுடைய வீட்டில் தங்கியிருந்த சகோதரர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, முல்லைத்தீவு, துணுக்காய் அய்யன்குளம் பகுதியில் நேற்று 49 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருடன் இருந்த 26 வயதுடைய இளைஞரும் மின்னல் தாக்கி பலத்த காயங்களுடன் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.