Print this page

நசீருக்கு ஆளுநர் பதவி, யாப்பா இடமாற்றம்

தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.