Print this page

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்ற தெரிவுக் குழு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர, அந்தப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா ஆகியோர் இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளனர்.