Print this page

26 கோடி ரூபா மோசடி, 180 கடவுச் சீட்டுக்கள் மீட்பு

மஹரகமவில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.