Print this page

எதிர்க்கட்சித் தலைவர் இன்று விஷேட உரை?

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

அடுத்துவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இன்று நாடாளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.