Print this page

எட்டு வருடங்களின் பின் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அதிக வெப்பம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நாட்டின் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 செல்சியஸ் பாகையாக காணப்படுகின்ற போதிலும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக 39 பாகை செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

08 வருடங்களின் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய வெப்பநிலை இதுவாகும் என பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் திலக் விஜயதுங்க பண்டார கூறுகிறார்.