Print this page

ரணில் - அநுர இடையே அரசியல் டீல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திஸாநாயக்கவை முன்னிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கும் அநுர திஸாநாயக்கவுக்கும் இடையில் ஒரு சிறந்த உறவு கட்டியெழுப்பப்பட்டதாகவும், மே தினத்தை ஏற்பாடு செய்வதில் அரசாங்கத்தின் ஆதரவை நன்கு பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

மே தினக் கூட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி அமைப்பு கோரிய இடத்தை அரசாங்கம் வழங்கியதாகவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி  முதலில் இடம் கோரிய போதும் அதனை வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு உதவுவதுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக பாகுபாடு காட்டுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.