Print this page

குண்டு துளைக்காத வாகனத்துக்கு இணக்கமில்லை

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டுதுளைக்காத மோட்டார் வாகனத்தை பெற்றுக்கொடுக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிடவில்லை என, அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான யோசனை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.