Print this page

24 லட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும

இரண்டாம் கட்ட நிவாரணத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் 24 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதுவரையில் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு மேலதிக வாய்ப்பு வழங்கப்படும் என எப்பாவல - சிலோன் பாஸ்பேட் நிறுவனத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.

20 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும பலன்களைப் பெறுவதற்கு உரிமையுள்ளமையும் விசேட அம்சமாகும்.