Print this page

திஸ்ஸ கரலியத்த சஜித் அணியில் இணைவு

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த சமகி ஜன பலவேகயவில் இணைந்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சராகவும், உள்ளுர் மருத்துவ அமைச்சராகவும் கடமையாற்றியதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரை சமகி ஜன பலவேகவின் மதவாச்சி பிரதேசத்தின் இணை அமைப்பாளராக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்துள்ளார்.