Print this page

மூன்றாவது முறை பிரதமராகும் மோடிக்கு இ.தொ.கா தலைவர் வாழ்த்து

 

இந்தியாவின் மக்களைவை தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையும் ஆட்சி அமைத்துள்ளமைக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் இந்திய மக்களுக்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருளாதார ரீதியில் வலுவான ஒருநாடாக கட்டி அமைத்துள்ளார்.

அதே போல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்திய அரசு கடன் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி இலங்கைக்கு கை கொடுத்துள்ளது. மேலும் வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.

இன்று இந்தியாவில் 3 வது முறையாக ஆட்சி அமைத்து மீண்டும் அதிகாரத்தில் அமர்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உலகத்தின் வலிமை மிக்க தலைவராகவும் அவர் மாறியுள்ளார் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.