Print this page

இரண்டு வாரங்களில் பாரிய அரசியல் மாற்றம்

இன்னும் இரண்டு வாரங்களில் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் கூட்டணி தொடர்பில் நாட்டில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் பரந்த அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடுவார் என்றும் அந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 95 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைத்து பலப்படுத்தவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக வெற்றிபெறச் செய்யவும் தாம் செயற்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.