Print this page

இந்தியாவில் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வந்துள்ள சிறப்பு அழைப்பு

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று(12) பதவியேற்க உள்ள நிலையில்,அவரின் பதவியேற்கும் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செந்தில் தொண்டமான் இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.