Print this page

ஆளும் கட்சி எம்பிக்கள் எதிர்கட்சியுடன் இணைவு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பலவேக கட்சியில் இணைய தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்கள் சமகி ஜன பலவேக கட்சியில் இணைவதற்கு ஏற்கனவே இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் இணைந்ததன் பின்னர் வழங்கப்படும் பொறுப்புகள் தொடர்பிலான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இந்த நாட்களில் நடைபெறும் எனவும் எம்.பி கூறினார். 

எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் சமகி ஜன சனந்தவின் கீழ் போட்டியிடும் எனவும், எதிர்வரும் சில தினங்களில் சமகி ஜன சனந்தத்தை வெளிக்கொணர அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எம்.பி தெரிவித்தார்.