Print this page

ரங்கே பண்டார மகனின் காரில் மோதி முச்சக்கரவண்டி சாரதி ஆபத்தான நிலையில்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவலவஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.