Print this page

1700 சம்பள உயர்வு வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பள அதிகரிப்புக்கு எதிராக அகரபதன தோட்டக் கம்பனி உள்ளிட்ட பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.