Print this page

பாடசாலையிலிருந்து டெடனேட்டர்கள் மீட்பு

கஹடகஸ்திகிலிய பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலிருந்து டெனேட்டர்கள் மூன்றும் வெடிமருந்து செய்யப் பயன்படுத்தப்படும் சேவா நூலும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் ஐ.எம் மஹிந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை திறக்கப்பட்டதன் பின்னர் பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டவாறு கிடந்த மூன்று டெடனேட்டர்களும், சேவா நூலும் காணப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தின​ர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் ​அங்கு வேறு பொருள்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லையென பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பாடசாலை மாணவர்கள் பெற்றோருடன் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.