Print this page

புதிய கூட்டணி கலந்துரையாடலில் பங்கேற்ற சஜித் அணி எம்பிக்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் வழிநடத்தல் குழு கூட்டம் நாடாளுமன்றத் அவைத் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா எம்.பி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பலமான இரண்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக அரசாங்கத்திற்கு உதவ முன்வரும் குழுவொன்று தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.