Print this page

அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு

நிறைவேற்று அதிகாரமற்ற அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி இலங்கையின் தேசிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, அண்மையில் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுடன், ஒவ்வொரு ஊழியருக்கும் 15,000 ரூபா உரித்துடையது.

அரசு ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்யவும், அடுத்த ஆண்டு முதல் அவர்களின் சம்பளத்தை திருத்தவும் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன தலைமை தாங்கினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த வருடத்தில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி குழுவிடம் பரிந்துரைத்துள்ளார்.

இதற்கு நிதியமைச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.