Print this page

முகத்தை முழுமையாக மூடினால் வழக்கு தாக்கல்

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைது செய்து வழக்கு தொடர முடியும் என சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்த, இனிமேல் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.