Print this page

பயங்கரவாதிகளின் சடலங்கள் தோண்டியெடுப்பு

சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள், மரபணு பரிசோதனைகளுக்காக, தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே, இந்தச் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்க ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.