Print this page

மொட்டுக் கட்சி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனியான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள் 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர்கள் 72 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனி வேட்பாளரை முன்வைக்க கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் 61 உறுப்பினர்கள் ஆதரவும் 11 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் 5 அல்லது 6ஆம் திகதி அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.