Print this page

கடைசி நேரத்தில் கைவிரித்த தம்மிக்க பெரேரா!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் வேட்பாளராகப் போட்டியிடப் போவதில்லை என பொஹொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாளை (07) அறிவிப்பு விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் நிலையில் இன்று மாலை தனது அதிருப்தியை செயலாளர் சாகர காரியவசத்திடம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“2024 ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகப் போட்டியிடமாட்டேன் என்று தெரிவிக்கிறேன். 

முதலில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராக என்னை முன்மொழிந்த கட்சித் தலைமைக்கும், உங்களுக்கும் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடப் போவதில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் வெற்றி பெறவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி 

தம்மிக்க பெரேரா (P.M.)