Print this page

மேலும் மூவரின் ஆதரவு ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பிபில நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கம்பஹா மாவட்டத்தில் சமகி ஜன பலவேக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அறிவித்துள்ளார்.

அத்துடன், ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், இலங்கை தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவது எனது தனிப்பட்ட மகிழ்ச்சி என பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அம்பாறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எம்.பி. இதனை தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவால் வெற்றிபெற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.