Print this page

தொ​லைத்தொடர்பு உபகரணங்களுடன் மூவர் கைது


அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் சீனப் பிரஜை உள்ளிட்ட மூவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, வீடொன்றிலிருந்த, அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அலைபேசிகள் 420, பல்வேறு தொலைப்பேசி நிறுவனங்களுக்கு உரிய சிம் அட்டைகள், 17,400 மற்றும் ரவுட்டர் 60 மற்றும் அதி தொழிற்நுட்ப உபகரணங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.