Print this page

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விசேடஇழப்பீட்டு பொதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த இழப்பீட்டை வழங்குவதற்காக பிரதமர், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் இந்த விசேட பொருளாதார பொதி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.