Print this page

டுபாய் வழியாக அமெரிக்கா சென்றார் பசில்

September 20, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (20) அதிகாலை டுபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

பசில் ராஜபக்ஷ இன்று (20) அதிகாலை 03.05 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் டுபாய்க்கு சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள "கோல்ட் ரூட்" முனையத்தில் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தி இந்த விமானத்தை அணுகுவதற்கான வசதியையும் அவர் பெற்றிருந்தார்.

இந்த வசதியின் கீழ், அனைத்து விமான நிலைய அனுமதி நடவடிக்கைகள், அதாவது சுங்கம், குடியேற்றம், முதலியன அதிகாரிகள் முனையத்திற்கு வந்து அதைச் செய்கிறார்கள்.

பசில் ராஜபக்ச டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அமெரிக்கா செல்வதற்கு அவர் எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.