Print this page

அழைப்பு விடுக்கப்பட்டால் ஆஜராவது அவசியம்

அரச அதிகாரிகளுக்கு நாளுமன்றம் அழைப்பு விடுத்தால் அந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் முன்னிலையாக கடமைப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.