Print this page

அங்கொடைக்கு அனுப்ப வேண்டும்

September 25, 2024

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவே விரும்பவில்லை எனவும், அடிமட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை வெற்றி கொள்ளச் செய்யும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி வருவதாகவும் சமகி ஜன பலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ இருக்கும் பக்கம் தோல்வி  என்று கூறுவது நயவஞ்சகர்கள் மற்றும் மனநோயாளிகளின் கூற்று எனவும் அவர்களை அங்கொடைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவராலும் எப்போதும் வெற்றிபெற முடியாது எனவும், 60 வருடங்களாக அநுர திஸாநாயக்க தரப்பினர் தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.