Print this page

பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ஒதுக்கீடு

September 26, 2024

தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக திறைசேரியில் இருந்து 11 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நவ., 14ஆம் திகதி நடத்துவதாக அறிவித்தார்.

தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க  தெரிவித்ததாவது, தேர்தலை நடத்துவது தொடர்பான செலவினங்களை ஈடுசெய்வதற்காக தனது அலுவலகம் 11 பில்லியன் ரூபாவை கோரியதாக தெரிவித்தார். ஜனாதிபதி திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு அதிகாரம் பெற்றுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியது.