Print this page

உகாண்டாவில் பதுக்கிய டொலர் விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு நாமல் சவால்!

உகண்டாவிலும் ஏனைய நாடுகளிலும் ராஜபக்ச குடும்பம் பல பில்லியன் டொலர்களை திருடி மறைத்து வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது தனது சமூக வலைத்தளக் கணக்கில் கருத்து வெளியிட்ட அனுர திஸாநாயக்க, பல வருடங்களாக ஜனாதிபதியும் ஏனைய குழுக்களும் தனது குடும்பம் பொதுப் பணத்தை திருடியதாக கூறிவருகின்றனர்.

அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 02 October 2024 17:11