Print this page

மீண்டும் வரிசை யுகம்! அநுர அரசாங்கத்தை எச்சரிக்கும் ரணில்!

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை எனவும் வலியுள்ளார்.

உங்கள் எதிர்காலத்தை புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடாக மீண்டு வரலாம்.

தவறினால் நாடு மீண்டும் அழியும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு நகரும். அதனால் கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.