Print this page

இன்று முதல் வீதி நிரல் சட்டம் அமுல்

இன்று முதல் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து பஸ்கள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பஸ்களுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது.