Print this page

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இணக்கம்

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்தேன். பத்து நாட்களில் எமது இரண்டாவது சந்திப்பு இது.

தீவிரவாதம் ஒரு கூட்டு அச்சுறுத்தல். அதனை கூட்டாக, மையப்படுத்திய நடவடிக்கையின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என இலங்கை ஜனாதிபதியும் நானும் இணங்கியுள்ளோம்.

பகிர்வான, பாதுகாப்பான எதிர்காலத்துக்காக இலங்கையுடன் ,பங்காளராக இணைந்து நிற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துகிறேன்” என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.