Print this page

காங்கிரஸ் முக்கிய புள்ளி பதவி விலகினார்

November 06, 2024

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபத் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.பிலிப்குமார் இ.தொ.காவிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.  

இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

இலங்கை தொழிலாளர் காங்ரஸில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரோடு அரசியல் ஈடுபட்டு வந்த பிலிப்குமார் 37வருடங்கள் இந்த கட்சியில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததோடு பிரதேச சபை உறுப்பினராகவும், மாகாணசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

37வருட அரசியலினால் தனது வாழ்க்கையை இழந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.