Print this page

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

November 12, 2024

இம்முறை பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் தொண்ணூறு ஆயிரம் பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, 63,145 பொலிஸ் அதிகாரிகள், 32,00 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், 11,010 முப்படை அதிகாரிகள், 12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 89,582 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.