Print this page

நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்

குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற இலங்கை பணியாளர்கள் 41 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அங்கு பணிப்புரியச் சென்று வீட்டு எஜமானால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், இலங்கைத் தூதுவராலயத்தில் தடுத்து வைக்கப்பட்ட 12 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், கடந்த 10 நாட்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

கட்டார் விமான நிலையத்துக்குச் சொந்தமான கியு. ஆர் – 668 விமானம் மூலம் அதிகாலை 2.10 மணியளவில் விமானநிலையத்தை இவர்கள் வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.