Print this page

புதிய அமைச்சரவை நியமனம் நாளை முற்பகல்

November 17, 2024

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. 

அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு