Print this page

எம்பி சலுகைகள் குறைப்பு

November 19, 2024

நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதனை வழிநடத்துவதற்கு இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.க்கள் இதுவரை அனுபவித்து வந்த வாகன கொடுப்பனவு, ஓய்வூதியம், வீடமைப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி சலுகைகளை குறைப்பதற்கான பிரேரணையை இந்த குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

பாராளுமன்றத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் 4-5 பில்லியன் ரூபா வரம்பில் உள்ளது, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மட்டும் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என பாராளுமன்ற புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.