Print this page

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நான் சரியான வேட்பாளர்...!

November 20, 2024

புதிய ஜனநாயக முன்னணி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொருத்தமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், அனுபவமிக்க தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன அதற்கு பொருத்தமானவர் என பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தான் பொருத்தமானவர் என நிமல் லான்சா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்தது.