Print this page

ஊழலும், மோசடியும் நிறுத்தப்பட்டால் அரசு நிறுவனங்களுக்கு லாபம்...!

November 21, 2024

இதுவரை காலமும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதே காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் காரணமாகவே இந்த நிறுவனங்கள் இதுவரை இலாபம் ஈட்ட முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த காரணங்களை நீக்கி இலாபம் ஈட்ட முடியாவிட்டால் அதற்கான காரணங்களையும் தேட வேண்டும் என அமைச்சர் ஹந்துன்நெத்தி குறிப்பிடுகின்றார்.