Print this page

'ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி வேட்பாளர் '

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மாற்று ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை மக்கள் விடுதலை முன்னணி களமிறக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் களனி தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி களமிறங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.