Print this page

பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி

November 21, 2024

10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவி செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சபை முதல்வராக பிமல் ரத்நாயக்கவும் ஆளுங்கட்சி பிரதம கொறடா நளிந்த ஜெயதிஸ்ஸவும் , எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.