Print this page

பிரதமரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

December 01, 2024

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பல்பொருள் அங்காடியில் தனியாக ஷாப்பிங் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதமருடன் பெரிய அளவிலான பாதுகாவலர்கள் இல்லை, ஒரே ஒரு பாதுகாவலரை மட்டுமே பார்க்க முடியும்.

தன் கூடையைக் கூட காவலாளியிடம் கொடுக்காமல் தானே சுமந்து வருகிறார்.

பிரதமரின் இந்த எளிய வாழ்க்கை முறை மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.